நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

Namal Rajapaksa 03

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version