721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் குழப்பம்! – சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள், சபைக்குள் ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கை முடிடைந்த பின்னர், பிரதமரின் விசேட உரை ஆரம்பமானது. அவ்வேளையில் ஜனாதிபதியும் சபைக்கு வந்தார்.

பிரதமர் உரையாற்றிக்கொண்டிருக்கையில், எதிரணி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். கோ ஹோம் கோட்டா என கோஷமெழுப்பினர். இதனால் சபையில் அமளி, துமளி ஏற்பட்டது. கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் பிரதமர் உரையை தொடர்ந்தார்.

அவரின் உரையின் பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வடகிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்;  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர்...

images 5 2
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 24 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய...