இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்! – 50 கைதிகள் தப்பியோட்டம்

Share
download 5 2
Share

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து 50க்கு மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள்,வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய 35 பேர் சரணடைந்துள்ளனர். ஏனையவர்களை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் புனர்வாழ்வழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண்டையில் தாக்கியதையடுத்து மாத்தறையைச் சேர்ந்த குழுவினருக்கும் மாதேம்பே பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிஸார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தப்பியோடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி இராணுவத்தினரும் பொலிஸாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து வேலியை உடைத்து சுமார் 600 மேற்பட்டோர் தப்பிச் சென்ற நிலையில் அவர்கள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...