நல்லதொரு முடிவுக்கு வாருங்கள்: வடமாகாண ஆளுநர்

Jaffna

நல்லதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.

அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருவதனால், அவர்கள் அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

அதனால் புதிய பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

அந்நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இன்றைய தினம் தனது அலுவலகத்திற்கு இ.போ.ஸ் பிரதிநிதிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து இருந்தார். அதன் போது , யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் அழைக்கப்பட்டு இருந்தார்.

குறித்த கூட்டத்தில் , இ.போ.ச பிரதிநிதிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட மறுப்பு தெரிவித்தனர்.

அதனை அடுத்து ஆளுநர் ” மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. தனி நபர், குழுக்களின் சுயலாபத்திற்காக அதனை தேடுவாரற்று விட முடியாது” என கூறி நல்லதொரு முடிவாக எடுங்கள் என கூறி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் முதல்வரும் வெளியேறியுள்ளார்.

அதனால் இ.போ.ச பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தினுள் உட்கார்ந்து இருந்து தமக்குள் பேசி வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version