VideoCapture 20220802 132307 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல்! – புடவை விற்பனை நிலையம் சேதம்

Share

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் குறித்த விற்பனை நிலையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் குறித்த விற்பனை நிலையத்தின் கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப்படுள்ளதுடன் குறித்த புடவை விற்பனை நிலையத்தின் உரிமையாளரும் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புடவை விற்பனை நிலைய உரிமையாளரினால் யாழ்ப்பாணம் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...

12 11
செய்திகள்இந்தியா

கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரானிய போர்க்கப்பல்: கடல்சார் ஒத்துழைப்பில் புதிய மைல்கல்!

இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ஈரானிய...

11 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கையின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் சஜித் பிரேமதாசவின் 4 முக்கிய பரிந்துரைகள்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய...

09 11
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி வழங்கியதாகத் தகவல்; ஆனால் டெஹ்ரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil...