சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும், நாட்டில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகார சபையால் சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, 5 ரூபாவால் சிகரெட் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சிகரெட் ஒன்றின் விலை20 ரூபாவால் அதிகரிக்கும்.
சிகரெட் விலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டும். அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – என்றார்.
அத்துடன். புகைப்பிடிப்பதால், ஒரு நாளில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அதேவேளை ஒரு 22 ஆயிரம் பேர் ஒரு வருடத்தில் உயிரிழக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment