இன்று சீனாவைப் பற்றி அனைவரும் ஊதுகிறார்கள். சீனாவின் சினோபாம் ஊசியை வடமாகணத்திற்கு வராமல் தடுத்திருக்கலாம் தானே. இதற்கு ஏன் நீங்கள் குரல்கொடுக்கவில்லை. சீனா வேண்டாம். சீனாவின் ஊசி வேண்டாம் என்று எவருமே குரல்கொடுக்கவில்லை.
இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
சீனாவந்து மீனவர்களுக்கு வலைகளைக் கொடுத்து உதவினால் உங்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
நாங்கள் யார் உதவிகளைத் தந்தாலும் வேண்டுவோம். சீனா 50 கோடி தந்தாலும் வாங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.