” சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” சீன நிறுவனத்திடமிருந்து உரம் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக அது தொடர்பில் ஆராயப்பட்டிருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நிபுணர்கள் எவரேனும் சீனா சென்று விடயங்களை ஆராய்ந்த பின்னரே உரத்தை நாட்டிற்கு கொண்டுவர தீர்மானித்திருப்பார்கள்.
எனவே, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பணத்தை அறிவிட வேண்டும். மக்கள் பணத்தில் இருந்து ஒரு சதம்கூட செலுத்தப்படக்கூடாது.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment