எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு அறிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்தக் கப்பல் வேறு எந்த நோக்கத்துக்காகவும் வரவில்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (2) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு உதவ இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகள் முன்வந்தன.
இந்த விடயத்தை பிரச்சினை எழாத வகையில் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, சீன கப்பல்கள் இதற்கு முன்னரும் வந்துள்ளன. இது 18 ஆவது கப்பலாகும். எரிபொருள் மற்றும் சேவை நோக்கிலே கப்பல் வருகிறது என்றார்.
சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் சில தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது தெரிந்ததே.
#SriLankaNews