தேசிய ரீதியாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு கலால் திணைக்களம் பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தி வருவதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளாா்.
அவ்வாறு பாதுகாப்பு ஸ்டிக்கா் கொண்ட மதுபானம் சந்தைக்கு வருவதற்கு முன்னா் சந்தையில் இருக்கும் மதுபான தொகை முடிவடையவுள்ளதாகவும் அதற்காக மூன்று மாத காலம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
ஏப்ரல் முதலாம் திகதியாகும்போது, சந்தைகளிலுள்ள அனைத்து மதுபான கையிருப்புகளிலும் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பொருத்தப்படும். தற்போதவரையில் ஒரு வருடமாக இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களில் இந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதமான முறையில் மதுபானம் உள்ளூர் சந்தைக்குள் நுழைவதை தடுப்பதற்காகவும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் உள்ளூர் சந்தைக்குள் வருவதை தடுக்கவும் இந்த பாதுகாப்பான முத்திரைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினாா்.
#SrilankaNews
Leave a comment