WhatsApp Image 2022 03 24 at 10.22.50 AM
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கானை கூட்டுறவு சங்கம் கையூட்டு பெறுகின்றது – அங்கத்தவர்கள் குற்றச்சாட்டு!

Share

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் கையூட்டு பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அங்கத்தவர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களாக நீண்ட காலமாக உள்ளோம்.

எமது தொழிலை நேர்த்தியாக செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் எமக்கான அனுமதிப்பத்திரங்கள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. இந்த அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பகுதி ப.தெ.வ.அ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் ஊடாகவே அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த அனுமதிப்பத்திரங்களை எமக்கு வழங்கும் போது கடந்த காலங்களில் சங்கத்தால் 250 ரூபா எம்மிடமிருந்து கையூட்டாக பெறப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு அங்கத்தவர்களிடமிருந்தும் 400 ரூபா இவ்வாறு பெறப்பட்ட பின்னரே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அனுமதிப்பத்திரங்களானது எமக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு சென்று அங்கு நாங்கள் வழங்கும் பணத்திற்கு பற்றுச்சீட்டு கேட்டபொழுது பற்றுச்சீட்டு தர முடியாது என்று அவர்கள் மறுக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு எமக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பான தகவலைப் பெறுவதற்கு, சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கத்தின் பொது முகாமையாளர் திரு.செ.சுரேஷ்குமார் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இது தொடர்பாக தொலைபேசியில் வினவ முயன்றபோது கேள்வியை முழுமையாக கேட்பதற்கு அனுமதிக்காமல் “மதுவரி திணைக்களம்தான் அனுமதிப்பத்திரம் வழங்குகின்றது. இது தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருடன் பேசுங்கள்.

உங்களுக்கு தகவல் தேவை என்றால் எழுத்து மூலமாக என்னிடம் கோருங்கள்” எனக்கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். மீண்டும் அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவேளை மறுமுனையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை. – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...