அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாத காலத்துக்கு மேலாக அதிபர் – ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்டத்தில் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் முகமாக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுக்களின் பின் தமது போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர் என சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment