ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று(24) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக அவர் பணியாற்றிய வேளையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற தவறான நிதிக் கையாளுகை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு இன்று(24) காலை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்
இது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Leave a comment