Gota
அரசியல்இலங்கைசெய்திகள்

என்னை மிரட்டவும் முடியாது; விரட்டவும் முடியாது! – கோட்டா சண்டித்தனம்

Share

“நான் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி. எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளேன். இந்நிலையில், நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

“மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நான் அமுல்படுத்தவில்லை. போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அனைத்துச் சட்டங்களும் பாயும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

“எனக்கு எதிராக எவரும் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்; போராட்டங்களையும் நடத்தலாம். ஆனால், என்னைப் பதவியிலிருந்து எவரும் விரட்ட முடியாது. 5 வருட மக்கள் ஆணைக்கமைய நான் ஜனாதிபதி பதவியில் நீடிப்பேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மீண்டும் அமுல்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிராகப் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அறவழிப் போராட்டம் மீது கைவைக்க வேண்டாம் எனவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நடத்திய விசேட சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ‘மொட்டு’வின் சிரேஷ்ட உறுப்பினர்களில் சிலர் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராகக் கருத்துக்களையும் முன்வைத்தனர். எனினும், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரினதும் வாய்களையும் மூடும் வகையில் ஜனாதிபதி மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...