இலங்கைக்கு எவ்வளவு அந்நியச் செலாவணி கிடைத்தாலும் இந்த வருடம் மின்வெட்டிலிருந்து எம்மால் தப்ப முடியாது எனவும் நாட்டின் மின்சார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும் எரிசக்தி துறை நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேசிய மின் உற்பத்தி நிலையத்துடன் புதிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் சேர்க்கப்படவில்லை.
சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது என கலாநிதி சியம்பலாபிட்டிய, சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவைப்பட்டால் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
சரியான தீர்மானங்களை இன்று அமுல்படுத்தினாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு 2026 ஆண்டளவிலேயே தீர்வு கிடைக்குமென கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment