uni teachers
இலங்கைசெய்திகள்

பொறுமை காக்க முடியாது – பல்கலை விரிவுரையாளர்களின் சம்மேளனம் எச்சரிக்கை !!

Share

தமது சட்டபூர்வமான கோரிக்கைகளுக்கு பதில் வழங்காதிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை குறித்து தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது என பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமது உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும் அளவிற்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும் அளவிற்கு பிரச்சினை வலுவடைந்துள்ளதாகவும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் அச்சமின்றி கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாம் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ளாதிருப்பதன் மூலம் கல்வித்துறைக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் மற்றும் தொழில்சார் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் கூறியுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன்  கடந்த ஒன்றரை மாத காலத்திற்குள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி சில பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...