IMG 20220615 WA0004
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பஸ் – மோ.சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் சாவு!

Share

தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தலவாக்கலை – கொத்மலை வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது எனத் தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராஜ் செல்லத்துரை (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தலவாக்கலை சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திலிருந்து பூண்டுலோயா நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் பத்தனைப் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுமே தலவாக்கலை சுற்றுவட்டத்திற்கு முன்பாக நேருக்கு நேர் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் விசாரணைகளின் பின்னர் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...