அம்பாறையில் குடியேறிய புத்தர் இன்று மாயமானார்!

தமிழர்கள் வாழும் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை அகற்றப்பட்டுள்ளது.

அம்பாறை – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று வைக்கப்பட்ட புத்தர் சிலையானது இன்று அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தர் சிலை நிறுவியமைக்கு அப்பகுதிவாசிகள் கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

Buddha 01

இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையைத் தொடர்ந்து, பொலிஸார், பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் அவ்விடத்திற்குப் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த சிலையை வைப்பதற்கு முறையான அனுமதியை பிரதேச சபையில் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளரினால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இவ்வாறு கடும் எதிர்ப்புகளை ஆர்ப்பரித்தமையைத் தொடர்ந்து, சங்கமன்கண்டிப் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version