சிறுவனின் சடலம் மீட்பு e1654603035709
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்வீழ்ச்சியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

Share

புசல்லாவை – உடகம, அமுனுவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கம்பளை – நவோதவிட்ட பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது நண்பருடன் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த சிறுவனே நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற பகுதியில் இருவரும் குளிக்கச் சென்றபோது, ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புசல்லாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690253c5e39ee
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவருக்குக் கொலை மிரட்டல்! – போலீசார் விசாரணை தீவிரம்!

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு “ஹந்தயா”...

25 69024001ac0cb
இலங்கைசெய்திகள்

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி – போலீசார் தீவிர தேடுதல்!

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவேளை திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன்...

25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...