புசல்லாவை – உடகம, அமுனுவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கம்பளை – நவோதவிட்ட பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது நண்பருடன் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த சிறுவனே நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற பகுதியில் இருவரும் குளிக்கச் சென்றபோது, ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புசல்லாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment