tamilni 378 scaled
இலங்கைசெய்திகள்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மரணம்

Share

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மரணம்

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டின் அருகே சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.

தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (23.11.2023) மாலை 5.20 மணியளவில் மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன், மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...