tamilni 405 scaled
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

Share

கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி .

குறித்த சம்பவம் 26 ஆம் திகதி மதியம் 1:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தாயார் நாளாந்த கூலி வேலைக்காக சென்ற பொழுது வீட்டில் தந்தையுடன் இருந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

தந்தையார் நித்திரையில் இருந்த பொழுது காணிக்குள் அமைந்திருந்த பாதுகாப்பற்ற (மண்) கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான் .

திடீரென கண் விழித்த தந்தை சிறுவனைக் காணாது தேடியுள்ளார். பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிணற்றுக்குள் சேற்றில் புதைந்த நிலையில் சிறுவனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சந்திரகுமார் பாதுசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...