கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டியுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பான விசாரணையிலேயே இவர் கைதாகியுள்ளார்.
இவர் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலைக்கு அருகே இடம்பெறும் கட்டட நிர்மாண பணிகளுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்தவர் எனக் கூறப்படுகிறது.
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய விமானப்படைத் தளபதி பத்திரண மற்றும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் இந்த மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment