எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் - வவுனியாவில் நடந்த சம்பவம்
இலங்கைகுற்றம்செய்திகள்

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – வவுனியாவில் நடந்த சம்பவம்

Share

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – வவுனியாவில் நடந்த சம்பவம்

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(28) புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரின் பெற்றோர் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

23 வயது இளைஞன் உயிரிழப்பு

சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த 23 வயதான அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...