இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 4,000 துவிச்சக்கர வண்டிகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிகளை குறைக்கும் நோக்கில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment