Gottabhaya 1
இலங்கைஅரசியல்பிராந்தியம்

பசுமை விவசாயத்துக்கான தேசிய கொள்கைக்குப் பலன்தரும்- ஜனாதிபதி

Share

விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது.

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தினப் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் கலாசார ரீதியாகச் சிறப்பாகக் கொண்டாடுவதன் மூலம், எதிர்காலத்தில் வளமான பயிர் அறுவடைக்குச் சூரியபகவானின் ஆசீர்வாதங்களும் பாதுகாப்பும் கிடைக்கின்றன என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகக் காணப்படுகின்றது.

சுபீட்சத்துக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வகையில் இந்துக்களினால் முன்னெடுக்கப்படும் சடங்குகள், காலங்காலமாக இலங்கைச் சமூகத்துடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும்.

இது, பசுமை விவசாயத்துக்கான தேசிய கொள்கைக்குப் பலன்தரும் என்பதே பெரும்பான்மையானோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

இவ்வருடமும், சுகாதாரத்துறையின் ஆலோசனைப்படி உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே தைப்பொங்கலை அனைவரும் கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

1990 ஆம்புலன்ஸ் சேவையின் புதிய அலுவலகம் திறப்பு!

இலங்கையின் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவையான ‘1990 சுவசெரிய’ (1990 Suwa Seriya) திட்டத்தின் புதிய...