சடலமாக மீட்பு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தூக்கில் தொங்கிய நிலையில் நோயாளி சடலமாக மீட்பு!

Share

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனநோய் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ தினமான இரவு 7.45 மணிக்குக் கடைசியாக விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டுச் சென்ற பின்னர், மலசலம் கழிப்பதற்காகக் குறித்த நபரை, அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் மலசலகூடத்துக்குக் கூட்டிச் சென்று விட்டு வெளியில் காத்திருந்துள்ளார்.

மலசலகூடத்துக்குள் சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து, உறவினர் கதவைத் திறந்த பார்த்தபோது குறித்த நபர் மலசலகூட யன்னல் கம்பியில் உடுத்திருந்த சாரத்தைப் பயன்படுத்தித் தூக்கில் தொங்கியிருந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை ப் பெற்று சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...