பஸிலின் சம்மந்தி ‘றோ’ முக்கியஸ்தர்! – சர்ச்சையைக் கிளப்புகிறார் வீரவன்ச

76029f91 439d3e2f f1636930 basil

லிற்றோ நிறுவனத்தையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்து வருகின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம், நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பஸில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது.

பஸில் ராஜபக்சவின் இரு மகள்களில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும்
திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில் திருமணம் முடித்துள்ள மகளின் மாமனார், ‘றோ’ உளவு அமைப்பின் பிரதானியாவார்.

இலங்கை கேட்கும்போதெல்லாம், கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவுக்கு இருக்காதா? அதனடிப்படையில், லிட்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு தயாராகி வருகின்றது.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version