நிதியமைச்சராக பசில் ராஜபக்ஸ பொறுப்பேற்றதன் பின்னர், இந்தியாவுக்குச் சென்று பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை ஈடுபட்ட பசில் ராஜபக்ஸ மீண்டும் இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக, அமெரிக்காவுக்குச் சென்று, நாடு திரும்பிய நிலையில், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இந்தியாவுக்குச் செல்லும் அவர், ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்திய விஜயத்தின் போது, திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
#SrilankaNews

