தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடமிருந்து லொஹான் ரத்வத்தவின் குறித்த நடவடிக்கை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது குறித்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் எட்டு தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் அரசியல் கைதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.
இதேவேளை கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment