இலங்கைக்கு தடை நீக்கம்! – UAE அறிவிப்பு

98787

இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்தால் (UAE)  நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை பெற்றோருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீக்கப்படவுள்ளது.

கொரோனா பரவலை அடுத்து வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version