அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்
யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment