sivajilinkam
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க காணிகளை சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு!

Share

கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க 600 ஏக்கர்களை சுவீகரிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்துள்ளோம்.

இவ்வாறு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.

அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...