air
இலங்கைசெய்திகள்

விமான நிலையங்கள் மீது தாக்குதல்! – விசேட பாதுபாப்பு ஏற்பாடு

Share

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இன்று மேலதிகமாக படையினர் களமிறக்கப்பட்டு விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலைத் தொடர்ந்து குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

இத தாக்குதல் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் இராணுவ இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது எனவும் அதன் மூலமே குறித்த மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் தெரிய வருகிறது.

இதேவேளை இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் தலிபான்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்துமாறு பொலிஸ் பிரதானிகள் அவர்களின் கீழ் உள்ள உளவு பிரிவுகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...