16 24
இலங்கை

லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல்: இந்தியர்களை உடன் வெளியேர உத்தரவு

Share

லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல்: இந்தியர்களை உடன் வெளியேர உத்தரவு

லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் (Israel) ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லெபனானில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India) அறிவுறுத்தியுள்ளது.

பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகிறது.

இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலரும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல்: இந்தியர்களை உடன் வெளியேர உத்தரவு | Attack Israel Attack In Lebanon

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடித்தது.

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 37 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல்: இந்தியர்களை உடன் வெளியேர உத்தரவு | Attack Israel Attack In Lebanon

இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உள்பட பலர் உயிரிழந்தனர். இதனால், டென்ஷன் ஆன ஹிஸ்புல்லா அமைப்பு மீண்டும் இஸ்ரேல் மீது 150-க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கின.

இதற்கிடையே, லெபனான் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகுவதாக சொல்லப்படுகிறது.

மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் நடைபெற சாத்தியம் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் தனது வீரர்களிடம் தரை வழி தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, லெபனானுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், ஏற்கனவே லெபனானில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...