வெளிநாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால் 10.6 மில்லியன் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் உள்ள அரச வங்கிகளுக்கு சொந்தமான மூன்று தானியக்க பண இயந்திரங்களில் (ATM) குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
4.6 மில்லியன், 2 இலட்சத்து 75 ஆயிரம் மற்றும் 5.7 மில்லியன் ரூபா பணம், மூன்று தனித்தனி ஏரிஎம் இயந்திரங்களில் இருந்து திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மென்பொருளை ஹேக் செய்து திருட்டு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment