3 3
இலங்கைசெய்திகள்

இரண்டாம் கட்ட அஸ்வெசும விண்ணப்பம்: வெளியான முக்கிய அறிவிப்பு

Share

இரண்டாம் கட்ட அஸ்வெசும விண்ணப்பம்: வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், குறித்த குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்கனவே அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 09 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, அஸ்வெசும திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத குடும்பங்கள் மட்டுமே குறித்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்களும் மீண்டும் அஸ்வெசும திட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிரதேச செயலகங்களுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குடும்பமாக விண்ணப்பிக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...