இலங்கைசெய்திகள்

இலங்கை அகதிகள் ருவாண்டாவுக்கு!!

Share
1668587322 1668578482 lady R3 saranagatha L
Share

டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக “The New Humanitarian” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர்கள்

உயிரைப் பணயம் வைத்து படகில் அங்கு சென்றுள்ளனர்.

அவர்களில் சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த தீவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்றவர்கள் சிலர் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள “ரீ யூனியன்” தீவுக்கு படகுகளில் ஏறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜொன்சன் பதவி வகித்த காலத்தில், ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் இருந்தது, அது நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டுக்கு அகதிகளை அனுப்பும் பிரித்தானிய அதிகாரிகளின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...