நாட்டின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்தியர் விலகியுள்ளார்.
விசேட வைத்தியர் அசேல குணவர்த்தனவே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
தொடர்ந்தும் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதில் பயனற்றது என எண்ணி இந்த பதவி விலகல் கடிதத்தை கையளித்தேன் என விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த குழுவில் இருந்து பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோர் விலகியிருந்தனர்.
மேலும் சினோவெக் தடுப்பூசியின் பயன்பாட்டை நாட்டில் அனுமதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பித்ததில் முன்னெடுக்கப்பட்டபோது குறித்த மருத்துவர்கள் விலகியிருந்தமை குறிப்பிடதக்கது.
Leave a comment