கடல் அட்டைகளுடன்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த 3 கோடி ரூபா பெறுமதியான கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது!

Share

இலங்கைக்குக் கடத்த இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளுடன் ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதப்படுத்தப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, பட்டணம் காத்தான் புறவழிச் சாலைப் பகுதியில் கேணிக்கரைப் பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.

மற்றைய நபர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது இலங்கைக்குப் படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரியவந்தது.

அவரிடம் இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

#SriLanka&IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...