24 662f3a3548a4a
இலங்கைசெய்திகள்

ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

Share

ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

தேர்தல்கள் எதிர்வரும் நிலையில் இம்முறை தேசிய அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

ஒவ்வொரு கட்சியும் இலட்சக் கணக்கான மக்களை அணிதிரட்டி தமது பலத்தினை வெளிப்படுத்துவதற்கும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் மருதானையில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தரப்பை ஆதரிக்கவுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ரூபவ் நிமல் லன்சா தலைமையிலான புதிய கூட்டணியின் அங்கத்தவர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர்.

ஆளும் பொதுஜன பெரமுண (மொட்டுக் ) கட்சி யின் மே தினக் கூட்டம் பொரளை கம்பல் மைதானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராசபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு நகரசபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமாச தலைமையிலான இஎப் ​பேரணியில், பங்காளிக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், மனோ கணேசன், பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான அணியினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் நாட்டின் நான்கு இடங்களில் நடைபெற முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் ‘நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

எனினும் யாழ்ப்பாணத்திலும் அநுராதபுரத்திலும் நிலவும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கட்சியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தலைமையில் குறித்த இடங்களில் நடைபெறவிருந்த பேரணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

எனினும் கொழும்பில் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மாளிகாவத்தை பி.ஆர்.சி மைதானத்தில் பேரணி ஆரம்பமாகி, பொதுக்கூட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இன்னுமொரு கூட்டம் மாத்தறையில் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் நடைபெறவுள்ளது.

அண்மைக்காலமாக பல பிரிவுகளாப் பிரிந்த அரசியலில் பேசு பொருளாகிப் போயுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பின் ஏற்பாட்டில் மே தினக் கூட்டம் கம்பஹா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விஜயதாச ராசபக்ச மற்றும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சாரதீ துஷ்மந்த மித்திரபால ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மலையக மக்களின் பிரதான அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டக்கலையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த பேரணியில் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.

விமல் வீரவங்ச. உதய கம்மன்பில, வாசுதேவ, திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் மேலவை இலங்கைக் கூட்டணி தயாசிறி தலைமையிலான மனிதநேயக் கூட்டணி, ரொஷான் ரணசிங்க தலைமையிலான நாட்டை கட்டியெப்புவதற்கான ஊழல் எதிர்ப்பு முன்னணி ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் மே தினக் கூட்டம் கிருலப்பனை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...