இலங்கைசெய்திகள்

தமிழர் தலைநகரில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

Share
11
Share

தமிழர் தலைநகரில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

திருகோணமலையில் (Trincomalee) 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை (Sri Lanka Army) அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இன்று (01) திறக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது.

உவர்மலை பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 22ம் படைப்பிரிவினை அடைவதற்கு மூன்று வீதிகள் காணப்படுகிறது.

இருப்பினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் (Jaffna) 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட வீதியே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...