ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளரை ஏன் புகைப்படம் எடுக்கிறாய் எனக் கேட்டு 04 இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு பிராநித்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment