யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா 2021 நாளை மறுதினம் (2) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ் மாநகர முதல்வரின் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர். மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் இசைக் கலைஞர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற உள்ளதோடு, கே.பி.குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாதசங்கம், வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
#SriLankaNews
Leave a comment