DSC04473
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மக்கள் சந்திப்பு நாளில் எங்கு செல்கிறார் ஆளுநர்?

Share

மக்கள் சந்திப்பு நாட்களில் ஆளுநர் எங்கு செல்கின்றார் என முன்பள்ளி ஆசிரியர்கள் கேள்வியெழுப்பிள்ளனர்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு,  மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் சம்பள அதிகரிப்பை கோரியும் , நிரந்தர நியமனம் மற்றும் விடுமுறைகள் சிக்கல்களை நிவர்த்திக்க கோரியும்,  இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பிரதிநிதிகள் சிலரை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் ஆளுநர் வவுனியாவில் நடக்கும் நடமாடும் சேவைக்கு சென்றிருப்பதாகவும் இதனால் இன்றைய தினம் அவரை சந்திக்க முடியாது.

எனவும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு ஆளுநர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரமாட்டார் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த பிரதிநிதிகள் முன்பள்ளி ஆசிரியர்களிடம் அவர்களுள் அவர்கள் அதிகாரிகள் தெரிவித்ததை தெரிவித்தனர்.

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு தடவையும் தாங்கள் வந்து ஏமாறுவதாகவும் திங்கட்கிழமைகளில் மக்கள் சந்திப்பு என தெரிவித்துவிட்டு ஆளுநர் ஒவ்வொரு திங்களும் எங்கு செல்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார் .

இதனையடுத்து ஆளுநர் இங்கு வரும் வரைக்கும் தாம் இங்கு அமர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...