IMG 20220214 WA0043
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மயிலிட்டி துறைமுக இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பம்!!

Share

யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல், படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி, சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல், துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர சபையின் புதிய முன்னெடுப்பு: மக்களின் மன அழுத்தத்தைப் போக்க ‘சித் சுவ புரவர’ வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மன அழுத்தத்திலிருந்து அவர்களை...

10 13
செய்திகள்உலகம்

டிஜிட்டல் களத்தில் தீவிரமடையும் அமெரிக்கா – ஈரான் போர்: அனிமேஷன் காணொளிகளால் புதிய பரிமாணம்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி...

09 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்: ஈரானின் பாராட்டு!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையே பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து, இலங்கையின் வெளிவிவகார...

08 13
செய்திகள்உலகம்

லெபனான் – இஸ்ரேல் போர் பதற்றம்: பாரிஸில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தீவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கும்,...