VideoCapture 20220218 110648
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அரசாங்க தகவல் திணைக்கள கிளை யாழில் திறப்பு!!

Share

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.

அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக இவ் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கண்டி, காலி, அனுராதபுரம், வவுனியா,பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இப்பணியகம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளை வார நாட்களில் இங்கு விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந் நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன் ஆகியோரும் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...