மீண்டும் வெல்லவாய எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று (01) முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று (01) முற்பகல் வெல்லவாய, எல்லேவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மாணவர்கள் சிலரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் புத்தல பிரதேச உயிர்காப்புக் குழுவினரின் உதவியுடன் வெல்லவாய பொலிஸார் இவர்கள் இருவரினதும் சடலங்களை இன்று பிற்பகல் மீட்டுள்ளனர்.
இவ்வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய 21 வயதான அப்துல் லெத்தீப் அயாஸ் (21) மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 22 வயதான அமீன் ரிபாத் ஆகிய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
#SrilankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment