கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளாக ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அழைத்து செல்லப்பட வேண்டும் எனவும் சாரதி, நடத்துநர் ஆகியோர் கட்டாயம் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரயில் சேவைகளும் நாளைமுதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
#srilanka
Leave a comment