ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதிமான் மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்று அகற்றப்பட்ட ஜேசுரான் கணேசன் மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்த நீதவான், மைத்திரிபால சிறிசேனவை வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு அறிவித்தல் அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் கவனயீனத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 298 ஆம் சரத்தின் கீழ் அவரை வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு அறிவித்தல் அனுப்புமாறு, முறைப்பாட்டாளர்கள் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அறிவித்தல் அனுப்புவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
#SriLankaNews
1 Comment